Tamil News  /  Astrology  /  Here We Will See About The History Of Palani Dhandayuthapani Temple

HT Yatra: கோபமடைந்த முருக பெருமான்.. பக்தர்களின் நம்பி ஆண்டியாக நின்ற மலை!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 03, 2024 05:50 AM IST

பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில்
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

தரை மட்டத்திலிருந்து பழனி திருக்கோயில் 450 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தரையில் இருந்து முருகனை காண வேண்டும் என்றால் 690 படிகளைக் கடந்து கோவிலுக்குள் செல்ல வேண்டும். ஆவினன்குடி, தென்பொதிகை என்று புராணங்களில் பழனிக்கு பெயர் இருந்துள்ளது.

தல வரலாறு

ஒருமுறை தனக்கு கிடைத்த அரிதான ஞானப்பழத்தை நாரதர் சிவபெருமானிடம் சாப்பிடுவதற்காக கொடுத்தார். அப்போது அருகில் பார்வதி தேவி இருந்தார். அந்த பழத்தை தங்களுடைய மகன்களான விநாயகர் மற்றும் முருகப்பெருமானுக்கு கொடுக்க விரும்பினார் பார்வதி தேவி.

அந்த பழத்தை பகிர்ந்து கொடுத்தால் அதனுடைய மகிமை போய்விடும் என சிவபெருமான் கூறியுள்ளார். எனவே இரு மகன்களுக்கும் சிவன் மற்றும் பார்வதி தேவி ஒரு போட்டி வைத்துள்ளனர். இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை கொடுக்கலாம் என முடிவு செய்தனர்.

முருக பெருமான் உடனே தனது வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்றிவர சென்றார். ஞானத்தின் நாயகனாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமான் தனது பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி அந்த ஞானப்பழத்தை பரிசாக வென்றுள்ளார்.

உலகத்தை சுற்றி வந்த முருகப்பெருமான் இந்த சம்பவத்தை கண்டதும் ஏமாற்றம் அடைந்து பெற்றோரின் மீது கோபம் கொண்டு அனைவரையும் பிரிந்து பழனி மலையில் குடி பெயர்ந்தார். ஆண்டியாக அனைத்தையும் துறந்த கோலத்தில் கையில் தடி வைத்துக் கொண்டு முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அழகு குத்தி, காவடி எடுத்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது இந்த கோயிலில் தான் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருவிழாக்களுக்கு மிகவும் பெயர் பெற்ற ஊராக பழனி திகழ்ந்து வருகிறது. சூரசம்காரம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கார்த்திகை திருநாள் உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் வெகு விமர்சையாக இங்கு கொண்டாடப்பட்ட வருகிறது. இதனை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கவும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கவும் வேண்டுதல் செய்ய ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்வது உண்டு குறிப்பாக நடிகர்கள் பலர் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்த பிரசாதத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது பிரபலமான பிரசாதம் ஆகும்.

நடைதிறப்பு

 

இந்த கோயில் காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை மூடாமல் திறந்திருக்கும்.

தண்டாயுதபாணி

 

சக்தி கிரி சிவகிரி என்ற இரண்டு மலைகளை அகத்தியரின் உத்தரவுப்படி இடும்பன் என்பவர் தென் பொதிகை நோக்கி எடுத்துச் சென்று கொண்டிருந்தார். சுமை தாங்க முடியாமல் அதனை பழனி மலையில் வைத்தார். அப்போது அங்கு இருந்த முருக பெருமான் சக்தி கிரி மலையின் மீது ஏறி நின்று கொண்டார். அவரை இறங்கும்படி இடும்பன் எச்சரித்துள்ளார்.

முருகப்பெருமான் பேச்சைக் கேட்காமல் தட்டிக் கழித்தார். கோபமடைந்த இடும்பன் முருகனை எதிர்த்துச் சென்றார். அதற்குப் பிறகு முருக பெருமான், அருள் பாலித்து தான் யார் என்று உணர்த்தி தன்னுடன் வைத்துக் கொண்டார். கையில் தண்டத்தோடு சக்தி கிரி மலையில் முருகன் ஏறி நின்ற காரணத்தினால் அவருக்கு தண்டாயுதபாணி என்று பெயர் உருவானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.