தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The History Of Pachamalai Subramanya Swamy Temple

HT Yatra: குன்றின் மீது குடிகொண்ட குமரன்.. திருமண பாக்கியம் தரும் பச்சைமலை முருகன்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 23, 2024 06:00 AM IST

பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

பச்சைமலை முருகன்
பச்சைமலை முருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த திருக்கோவிலில் வீற்றிருக்கக்கூடிய முருக பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏழு நாட்கள் சஷ்டி விரதம் இருந்து வழிபட்டால் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் ஆறு செவ்வாய்க்கிழமைகளில் முருக பெருமானுக்கு நீதிபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமான் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

தல வரலாறு

 

ஈரோடு மாவட்டத்தில் தென்பாக்கத்தில் அமைந்திருக்க கூடிய சிறிய மலைதான் இந்த மரகதகிரி மலை. மரகத கல்லின் நிறமானது பச்சை என்கின்ற காரணத்தினால் இது பச்சைமலை என அழைக்கப்படுகிறது. கோபத்தின் மொத்த உருவமாக துர்வாச முனிவர் இருந்து வந்துள்ளார். பொதிகை மலையில் இருந்து திரும்பி வரும் வழியில் குன்னத்தூர் என்ற ஊரை அடைந்துள்ளார்.

அங்கு இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டு விட்டு தனது ஞான திருஷ்டியால் சிவ பூஜையை செய்வதற்கு ஏற்ற இடம் எது என கண்டுள்ளார் அப்போது அவரது கண்ணுக்கு அரச மரமும் ஒரு புற்றும் கண்ணுக்கு தெரிந்துள்ளது. அந்த ஊர் தான் மொச்சூர் தலமாக தற்போது இருந்து வருகிறது.

உடனே தனது தகவ வலிமையால் பூஜை பொருட்களை வரவழைத்து சிவபெருமானை வழிபட்ட பூஜை செய்துள்ளார்.அப்போது துர்வாச முனிவர் குறைதீர்க்கின்ற குமரவேல் இங்கு இல்லை வருந்தியுள்ளார். திடீரென, இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் பச்சை நிறம் கொண்ட குன்றின் மீது குமரன் அமர்ந்திருக்கிறார் நீ அங்கு சென்று முருக பெருமானை வழிபட்டு விட்டு ஒரு சக்கரம் ஸ்தாபித்து பூஜை செய்யலாம் அசரீரி குரல் கேட்டுள்ளது.

அதன்படி முனிவர் அங்கே சென்று பூஜை செய்துள்ளார். அதன் பின்னர் நாகத்தின் வடிவில் இறைவன் முனிவர் முன்பு தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டுள்ளார். உடனே முனிவர் குமரன் இந்த குன்றின் மீது தோன்றி பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் நான் ஸ்தாபித்த இந்த சக்கரம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்படியே ஆகட்டும் என அவருக்கு ஆசி வழங்கி உள்ளார் இறைவன்.

முருகன் ஜோதியாக தோன்றி பக்தரிடம் கேட்டுக் கொண்ட காரணத்தினால் இங்கு ஆறு கால பூஜையும் குறை இல்லாமல் நடத்தப்படுகிறது.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அமைந்துள்ளது. கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளதால் இதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. மற்ற வாகன வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel