HT Yatra: பூமியை நிலை நிறுத்திய வராக பெருமாள்.. பிரம்ம தேவரின் வேண்டுதல் இது!
Varaha Avatar: மகாவிஷ்ணுவின் வராக அவதாரத்தின் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மூன்றாவதாக எடுக்கப்பட்டது தான் வராக அவதாரம். கடலுக்கு அடியில் ஒளித்து வைக்கப்பட்ட பூமியை பன்றி உருவம் எடுத்து தனது கொம்பினால் தாங்கிக் கொண்டு அருள் செய்வதற்காக இந்த அவதாரம் எடுக்கப்பட்டது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மகிழ்ச்சியான நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Mar 26, 2025 06:03 PMகுருபெயர்ச்சி பலன்: பண அதிர்ஷ்டம் இந்த ராசிகள் கதவை தட்டப்போகுது.. 2025-இல் மே குரு பெயர்ச்சி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
Mar 26, 2025 02:26 PMகீர்த்தி யோகம்: சனிப்பெயர்ச்சி 2025.. தலைகீழாக மாறப்போகும் ராசிகள் யார்?.. சனி குறித்து விட்டார்..!
Mar 26, 2025 11:17 AMரிஷபம், கும்பம், விருச்சிக ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. சனி உதயத்தால் நல்ல நேரம் ஆரம்பம்.. பதவி உயர்வு கிடைக்கும்!
Mar 26, 2025 06:30 AMKetu Transit 2025: அந்த ராசிகளே தான்.. கேது பெயர்ச்சி.. அசுப கிரகம் தரும் யோக பலன்களை பெறும் ராசிகள்!
Mar 26, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பணம் தேடி வரும் யோகம் உங்களுக்கா.. கவனமா இருங்க காரியம் முக்கியம்.. இன்று ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
வராக அவதாரத்தின் வரலாறு
படைத்தல் தொழிலை செய்து வரும் பிரம்மா, எத்தனை படைத்தாலும் குலம் பெருக வில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். அதன் காரணமாக தனது உடலை இரண்டாக பிரித்து ஆண், பெண் உருவங்களாக படைத்தார்.
அதில் ஆண் சுவாயம்புவமனு என்றும், பெண் சத்ரூபா என்றும் அழைக்கப்பட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த தம்பதியிடம் இருவரையும் பூமியில் வாழும் படி பிரம்ம தேவர் கூறினார். பூமியில் வாழ இடம் இல்லையே என்று அவர்கள் கூறினார்கள். அப்போது மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டு பூமி கடலுக்கு அடியில் மூழ்கி கிடந்தது.
கவலையில் ஆழ்ந்த பிரம்மா விஷ்ணுவை நோக்கி தவம் செய்தார். கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் உலகத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்று மகாவிஷ்ணு நோக்கி தவம் செய்தார். அப்போது அவருடைய நாசியில் இருந்து கட்டைவிரல் அளவிற்கு வராகம் வெளியே வந்தது.
அப்படி, பிரம்மதேவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவே மகாவிஷ்ணு பன்றி ரூபத்தை எடுத்தார். சிறியதாக வெளியே வந்த உருவம் நேரம் ஆக ஆக மிகப்பெரிய உருவமாக மாறியது. மகரிஷிகள் வேதத்தை பாடும் பொழுது மகிழ்ச்சியில் வராக பெருமாள் கர்ஜனை செய்தார். அது மூன்று லோகத்திலும் ஒலித்தது.
திதி என்ற பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள் முதலில் பிறந்தவரின் பெயர் ஹிரண்ய கசிவு, இரண்டாவதாக பிறந்தவர் ஹிரண்யாட்சன். இந்த இரண்டு குழந்தைகளையும் திதி நூறு ஆண்டுகள் கருவில் சுமந்து பெற்றெடுத்தார்.
இருவரும் பூதாகரமாக மழை போல் வெகு சீக்கிரத்தில் வளர்ந்து விட்டனர். இதில் ஹிரண்யாட்சன் கடும் தவம் புரிந்து பிரம்மதேவனிடம் உலகத்தை ஆளக்கூடிய வரத்தை பெற்றார். இதன் காரணமாக தேவர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அப்போது தேவர்கள் காணாமல் ஓடி ஒளிந்து மறைந்து கொண்டனர்.
அவர்களைத் தேடிக் கொண்டு பாதாள லோகத்திற்கு செல்வதற்காக கடலில் மூழ்கினார் ஹிரண்யாட்சன். பிரம்ம தேவரின் வரத்தால் அவரை யாராலும் அழிக்க முடியவில்லை. அப்போது கடலின் நாயகனாக விளங்கக்கூடிய வர்ணனை யுத்தத்திற்கு அழைத்தார். அவரோடு போரிட்டு வெற்றி பெற முடியாத வருணன், உங்கள் பராக்கிரமம் மிகப்பெரியது உங்கள் தோள்களுக்கு விருந்து கொடுக்க ஸ்ரீ மகா விஷ்ணுவால் மட்டுமே முடியும் என கூறினார்.
உடனே மகாவிஷ்ணுவை தேடி வைகுண்டம் சென்றார் ஹிரண்யாட்சன். அப்போது நடுவே நாரதர் வந்தார். எங்கே செல்கிறாய் என கேட்ட பொழுது, நான் வைகுண்டத்திற்கு மகாவிஷ்ணுவை தேடி செல்கிறேன் என கூறினார் ஹிரண்யாட்சன்.
நீ தேடிச் செல்லும் ஸ்ரீஹரி பாதாளத்தில் கிடக்கும் பூமியை வெளிப்படுத்துவதற்காக சென்றிருக்கிறார் என நாரதர் கூறினார். உடனே நான் செல்கிறேன் என ஹிரண்யாட்சன் சென்றார். அப்போது கடலுக்கடியில் விழுந்து கிடக்கும் பூமியை தனது கொம்பினால் மகாவிஷ்ணு மேலே ஏற்றிக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட ஹிரண்யாட்சன், பன்றி முகத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவை கேலி செய்து சிரித்தான். அதன்பின் இருவரும் யுத்தம் செய்ய தொடங்கினர். இந்த யுத்தத்தை காண்பதற்காக பிரம்மதேவர், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் நேரில் வந்தனர்.
ஹிரண்யாட்சனின் ஆயுதங்களை மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் தடுத்தார். ஹிரண்யாட்சனின் மாயத்தால் பல அசுரர்கள் தோன்றினார்கள் அவர்களும் மகாவிஷ்ணுவால் அழிக்கப்பட்டார்கள். ஹிரண்யாட்சனை சந்தியா காலம் வருவதற்குள் அழிக்க வேண்டும். உடனே இது குறித்து பிரம்மதேவர் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தார்.
மகா விஷ்ணுவும் ஹிரண்யாட்சனின் காதோரம் லேசாக தட்டினார். உடனே தலை சாய்ந்து மலை விழுவது போல் ஹிரண்யாட்சன் கீழே விழுந்தார். அதற்குப் பிறகு பாதாளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்து வராக பெருமாள் நிலை நிறுத்தினார். அனைவரும் துதிபாடி யுத்தத்தில் உதயசூரியனை போல் சிவந்து கிடந்த பெருமாளை மகிழ்வித்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
