HT Yatra: எமனின் சாபம் நீக்கிய சிவன்.. தொன்மை வாய்ந்த காலகாலேஸ்வரர்
கோவில்பாளையம் ஶ்ரீ காலகாலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை கொண்டுள்ள சிவபெருமான் அபிஷேகப் பிரியராக திகழ்ந்து வருகிறார். பல்வேறு விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கு மூலிகைகள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சில கோயில்களில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது கிடையாது. அப்படி ப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காலகாலேஸ்வரர் திருக்கோயில்.
தல வரலாறு
ஒருமுறை எமதர்மன் மார்க்கண்டேயரின் ஆயுளை முடிப்பதற்காக சென்று உள்ளார். அப்போது எமதர்மன் வீசிய பாசக்கயிறு தவறுதலாக சிவபெருமான் மீது விழுந்து உள்ளது. இதனால் கோபப்பட்ட சிவபெருமான் தனது பணியை சரியாக காரணத்தினால் எமதர்மனின் பதவியை பறித்து மனிதனாக பிறக்க வேண்டும் என கூறி பூலோகத்திற்கு அனுப்பி விட்டார்.
சிவபெருமானின் ஆணையின்படி பூலோகத்திற்கு வந்த எமதர்மன் விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானின் பல தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். அதன் பின்னர் இந்த தலத்திற்கு வந்த எமதர்மன் வழிபாடு செய்ய விரும்பிய போது, லிங்கத்தை உருவாக்குவதற்காக எதுவும் கிடைக்கவில்லை.
அதனால் மணலால் லிங்கம் செய்ய விரும்பிய எமதர்மன் குச்சியால் தரையை தோண்டியுள்ளார். அப்போது தரையில் இருந்து நுரை பொங்கியதால் அந்த நுரையுடன் சேர்த்து மணலால் லிங்கம் செய்துள்ளார். அதனை வழிபாடு செய்து வந்த எமதர்மனுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து எமலோக பதவியை மீண்டும் கொடுத்தார். காலனாக விளங்கிய எமதர்மனுக்கு கால பதவியை கொடுத்த காரணத்தினால் இந்த கோயிலில் வீற்றிருக்க கூடிய சிவபெருமான் காலகாலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இந்த தலத்தில் வீற்றிருக்கக்கூடிய சிவலிங்கம் மணலால் உருவாக்கப்பட்ட காரணத்தினால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவது கிடையாது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டு பூஜை செய்தால் இழந்த அனைத்தும் மீண்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த திருக்கோயில் கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள கோவில் பாளையத்தில் உள்ளது. இந்த திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய குரு பகவான் ஆசிய கண்டத்திலேயே மிக உயரமானது எனக் கூறப்படுகிறது.
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய குருபகவான் அந்தப் பகுதிகளுக்கு பரிகார நாயகனாக விளங்கி வருகிறார். குரு பெயர்ச்சியின் பொழுது இந்த கோயிலில் மிகவும் சிறப்பாக பூஜைகள் நடைபெறுவது இன்று வரை வழக்கமாக இருந்து வருகிறது. எமதர்மனின் சாபம் போக்கிய சிறப்பு மிகுந்த கோயிலாக இது விளங்கி வருகிறது.
செல்லும் வழி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் கோவில் பாளையம் என்ற கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து சிறு தூரத்தில் கோயில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9