தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The History Of Kanyakumari Guganatheeswarar Temple

HT Yatra: முருகனின் சாபம் நீங்கிய தலம்.. மிகப்பெரிய லிங்கமாக குகநாதீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 08, 2024 06:30 AM IST

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயிலின் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

குகநாதீஸ்வரர் திருக்கோயில்
குகநாதீஸ்வரர் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் தென்மாவட்டங்களிலேயே இந்த கோயிலில் உள்ள சிவபெருமானின் சிலை தான் ஐந்தரை அடி உயரம் கொண்டதாகும். ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலுக்கு முன்னரே இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் வீற்றிருக்கும் பார்வதி தேவி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். தன் தகப்பனான சிவபெருமானை சீடனாக வைத்து முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை கூறினார் இதன் காரணமாக முருகப்பெருமானுக்கு தோஷம் பற்றிக் கொண்டது அந்த தோஷத்தை போக்குவதற்காகவே குகனாக மாறிய முருக பெருமான் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார்.

சாபம் பெற்ற முருக பெருமான் இந்த கோயிலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது சாபத்தை போக்கியதாக கூறப்படுகிறது. குகனாக விளங்கக்கூடிய முருக பெருமான் சிவபெருமானை வழிபட்டதால் இந்த இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை குகநாதீஸ்வரர் என்று அழைக்கின்றனர்.

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய கோ சாலையில் பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன அந்த பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலை கொண்டு குகநாதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கால பைரவர் தெற்கு நோக்கி அருள் பாலித்து வருகிறார்.

இந்த கோயிலில் இருக்கக்கூடிய அரச மரத்தடியில் சிவன் சிலை ஒன்று காணப்படுகிறது. இது இந்த கோயிலில் தனித்துவமாக பார்க்கப்படுகிறது. குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வாராக்கடன் உள்ளிட்டவைகளுக்கு இந்த கோயில் மிகவும் விசேஷ தலமாக விளங்கி வருகிறது.

செவ்வாய்க்கிழமை அன்று ராகு கால நேரத்தில் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி, முருகர் சன்னதியில் தீபம் ஏற்றிவைத்து, பைரவருக்கு சிவப்பு அரளிப்பு கொண்டு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்த திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்ட ரயில் நிலையத்திலிருந்து மிகவும் அருகில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகளும் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.