தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Glories Of Lighting The Lamp

Karthigai Deepam: இருளை அகற்றும் தீபத்தின் மகிமைகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 06, 2022 05:12 PM IST

தீபம் ஏற்றப்படுவதால் உண்டாகும் மகிமைகள் குறித்து இங்கே காண்போம்.

கார்த்திகை மகா தீப திருவிழா
கார்த்திகை மகா தீப திருவிழா

ட்ரெண்டிங் செய்திகள்

விசேஷமாகக் கருதப்படும் இந்த தீபத்தின் மூலம் சிவபெருமான் நேரடியாக அருள்பாலிக்கிறார் எனக் கூறப்படுகிறது. தீபம் ஏற்று வழிபடும்போது சிவபெருமான் மட்டுமல்லாமல் மூன்று தேவியரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த தீபத்தின் மூலம் தீய சிந்தனைகள் நம்மை அணுகாது எனப் புராணங்கள் கூறுகின்றன. ஆன்மீகத்தின் படி குத்துவிளக்கில் அடிப்பாகம் பிரம்மா, தண்டிப்பாகம் மகாவிஷ்ணு, தீபமேற்றும் இடம் சிவபெருமான் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் அரசர்கள் மற்றும் பல பக்தர்கள் கோயில்களில் தீபம் ஏற்றுவதையே ஆகச் சிறந்த திருப்பணியாகப் பின்பற்றி வந்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றுவதற்குச் சிறந்த நாள் ஆகும். ஒளியின் வடிவாய் காட்சி தரும் இறைவனை வழிபடச் சிறந்த நாள் ஏதும் உண்டோ என ஆன்மீகம் கூறுகிறது.

பொதுவாகவே இல்லங்களில் இரு வேலைகள் விளக்கேற்றுவது அனைத்து மங்களங்களையும் தந்து நமது வாழ்வை ஒளிமயமாக்கும் எனக் கூறப்படுகிறது.

நமது இல்லத்தில் இருக்கும் இருளை தீபஜோதி வழிபாடு மூலம் அதனை விளக்கும் வகையில் ஏழரைச் சனி, அஷ்டம சனி போன்ற அசுப பலன்கள் வராமல் தடுக்கலாம். அதேசமயம் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்று வழிபட்டால் சிவகணங்களாகி சிவனடி சேரலாம் என ஆன்மீகம் கூறுகிறது.

சிவபெருமானே மழையாய் வீற்றிருக்கும் திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் போது அதைக் கண்டாலே வாழ்வில் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.

WhatsApp channel