தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அங்காரக யோகத்தில் ஆபத்து.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிப்பது கொஞ்சம் கஷ்டம்

அங்காரக யோகத்தில் ஆபத்து.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிப்பது கொஞ்சம் கஷ்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 13, 2024 05:54 PM IST

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று மீன ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் மற்றும் ராகு இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர் இதனால் அங்காரக யோகம் உருவாகியுள்ளது.

ராகு
ராகு

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

இந்நிலையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று மீன ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் மற்றும் ராகு இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர் இதனால் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் ஆபத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி 

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியது. இதனால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது மற்றவர்களின் பேச்சைக் கேட்பதை தவிர்க்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படும். நல்ல செய்தி வருவதற்கு சற்று தாமதமாகும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் பேச்சைக் கேட்காமல் இருந்தால் நன்மைகள் உண்டாகும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படும். தொழில் ஏற்பட்டு வந்த நன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் எனவே கவனமாக இருப்பது நல்லது.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத குற்றச்சாட்டுகளை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான சிக்கல்கள் உங்களுக்கு உண்டு. புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel