தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About Pudukkottai Arulmigu Thiru Kumaramalai Baladhandayudhapani Murugan Temple

HT Yatra: பக்தனுக்காக அமர்ந்த மலை.. குமரனை கொண்ட குமரமலை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 29, 2024 06:30 AM IST

புதுக்கோட்டை குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

புதுக்கோட்டை குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில்
புதுக்கோட்டை குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

பல்வேறு விதமான விசேஷ கோயில்களை கொண்ட முருகப்பெருமாள் கோயில்களில் மிகவும் விசேஷமாக இருக்கக்கூடிய கோவில்களில் ஒன்றுதான் குமரமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில். இந்த திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தலத்தின் பெருமை

 

இந்த பகுதிகளில் வளைகாப்பு நடத்தப்படும் பெண்கள் நிகழ்ச்சி அன்று கோயிலில் இருக்கக்கூடிய அர்த்தமண்டபத்தில் வீற்றிருக்கக்கூடிய வெயிலில் வளையல்களைக் கட்டி வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்யப்படும் பெண்களுக்கு பிரசவம் மிகவும் எளிமையாக இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்தில் இருக்கக்கூடிய தீர்த்தத்தில் நீராடி விட்டு முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் விரைவில் வாத நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வளைகாப்பு நடத்தப்படும் பெண்கள் நிகழ்ச்சி அன்று அர்த்தமண்டபத்தில் வீற்றிருக்கக் கூடிய வெயிலில் வளையல்களை கட்டு வழிபட்டால் எளிமையான பிரசவம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முருகப்பெருமான் வீற்றிருக்கும் குமர மலையில் சங்கு வடிவிலான சுனை தீர்த்தம் இருக்கின்றது. முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு இங்கிருந்து நீர் எடுக்கப்படுகின்றது. இந்த தீர்த்தத்தை அருந்தினால் நோய் நொடிகள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தலபுராணம்

 

குமரன் வீற்றிருக்கக்கூடிய குமார மலையை அடுத்து குன்றக்குடி பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் சேதுபதி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார் இவர் பழனியில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானின் தீவிர பக்தராக இருந்து வந்துள்ளார். நடந்து சென்றே பழனிக்கு காவடி எடுப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார். 80 வயதான இவர் முருகனுக்கு காவடி எடுத்துச் செல்லும் பொழுது மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் காவடி எடுக்க முடியாத நிலையில் இருந்த அவர் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். சேதுபதி தூங்கிக் கொண்டிருந்த பொழுது ஒருமுறை பழனி முருகன் கனவில் வந்து குமார மலை குன்றின் மீது இருக்கக்கூடிய புதருக்கு அருகில் நான் வந்து தங்கப் போகிறேன் அந்த இடத்தில் ருத்ராட்ச மாலை, எலுமிச்சம் பழம் காணப்படும் என்னை நீ அங்கு வந்து தரிசனம் செய்யலாம் என கூறியுள்ளார்.

காலை எழுந்தவுடன் சேதுபதி உடனே குமரமலைக்கு சென்று பழனியாண்டவர் கூறியது போல அங்கே பார்த்து உள்ளார் அவர் சொன்ன பொருட்கள் அனைத்தும் இருந்துள்ளன. அங்கே வேல் ஒன்றை நட்டு வைத்து வழிபாடு செய்யத் தொடங்கியுள்ளார். அதற்குப் பிறகு ஒரு சிறிய கோயிலைக் கட்டி அங்கே பாலதண்டாயுதபாணி சிலையாக வைத்து பிரதிஷ்டை செய்து வந்துள்ளார். அதன் காரணமாகவே அங்கு இருக்கக்கூடிய முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணி என அழைக்கப்படுகிறார். அதற்குப் பிறகு பல்லவராயர்கள் அந்த கோயிலுக்கு திருப்பணி செய்து வழிபாடு செய்துள்ளனர்.

அமைவிடம்

 

புதுக்கோட்டையில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இந்த குமரமலை அமைந்துள்ளது. இங்கு பேருந்து வசதிகள் வாகன வசதிகள் அனைத்தும் உள்ளன.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel