சூரியன் ஆட்டம் ஆரம்பம்.. கதற கதற ஓடும் ராசிகள்.. சிக்கி சிதைய போவது நீங்கள்தான்.. என்ன ராசி?
Lord Suriya: சூரிய பகவானின் விருச்சிக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Suriya: நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தில் மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவான் செய்யக்கூடிய செயல்பாடுகள் அனைத்தும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் விருச்சிக ராசிக்குள் நுழைத்தார். இது செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாகும். சூரிய பகவானின் விருச்சிக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாகும். அனைத்து வேலைகளையும் பொறுமையாக செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதிக செலவுகள் இருந்தால் அதனை கட்டுப்படுத்துவது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார்..இதனால் உங்களுக்கு நவம்பர் 16 முதல் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களால் நீங்கள் ஏமாற்றப்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கன்னி ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை தராமல் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழிலில் உங்களுக்கு பல்வேறு சவால்கள் ஏற்படக்கூடும்.
வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். வணிகத்தில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரிடம் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு ராசி
உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் நீண்ட தூர பயணம் செல்வதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழிலை விரிவுபடுத்த இது சரியான தருணம் கிடையாது. புதிய முதலீடுகள் செய்யும் பொழுது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பிறந்தவர்களுக்கு இடையே விரிசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.