Shani Peyarchi: சனி புத்தாண்டு தொடக்கம்.. நட்சத்திரத்தில் நாட்டியமாடும் ராசிகள்.. உங்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகுது
Shani Peyarchi: சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Shani Peyarchi: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து பலன்களை கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 21, 2025 04:50 PMபணமழை: உருவாகிறது கஜகேசரி யோகம்.. திடீர் முன்னேற்றம்.. செல்வம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
Apr 21, 2025 04:25 PMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 21 , 2025 மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
Apr 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 20 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 19, 2025 04:38 PMமீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனி பகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கின்றது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். இதுவரை எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். சிறப்பான செயல்பாட்டால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.
மகர ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வெற்றியடையும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த பல்வேறு விதமான சவால்கள் உங்களுக்கு சாதகமாக மாறும்.
எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். பல்வேறு விதமான நன்மைகளை உங்களுக்கு சனி பகவான் கொடுப்பார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். காதல் வாழ்க்கை உங்களுக்கு சாதகமாக முடிவடையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி
சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு இன்பங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டம் உங்களுக்கு பொற்காலமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வணிகத்தில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கக்கூடும்.
புதிய ஆர்டர்கள் உங்களைத் தேடி வரும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தன்னம்பிக்கை தைரியம் உங்களுக்கு அதிகரிக்க கூடும். திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
