குரு.. 2025 மிதுனம்.. ஆடம்பர வாழ்க்கை பெறும் ராசிகள்.. உங்களுக்கு லக் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு..
Lord Guru: குரு பகவானின் மிதுன ராசி பயணம் 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குரு பகவானின் அருளால் முன்னேற போகின்றனர்.

Lord Guru: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்
அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்நிலையில் குரு பகவானின் மிதுன ராசி பயணம் 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குரு பகவானின் அருளால் முன்னேற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மீன ராசி
2025 ஆம் ஆண்டு குரு பகவான் மிதுன ராசியில் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்ற காரணத்தினால் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கொடுக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
மேஷ ராசி
குரு பகவானின் மிதுன ராசி பயணம் 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும். உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு உடன் பிறந்தவர்களால் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக நிறைவேறும்.
துலாம் ராசி
குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
