கதற கதற 2025 வரை அடிக்க போகும் செவ்வாய்.. 3 ராசிகள் மிக கவனம்.. தப்பிப்பது கஷ்டம்..!
Lord Mars: செவ்வாய் பகவானின் வக்கிர நிலை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பல சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்குகின்றார். அவர் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றக் கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது செவ்வாய் பகவான் கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த டிசம்பர் 7ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கடக ராசியில் வக்கிர நிலை அடைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். செவ்வாய் பகவானின் வக்கிர நிலை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பல சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் வக்கர நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்மறை சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும் பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் பல்வேறு விதமான சண்டை மற்றும் சச்சரவுகள் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
குடும்பத்தினரோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு சற்று தாமதமாக கூடிய சூழ்நிலை உண்டாகும்.
கடக ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு செவ்வாய் பகவானின் தாக்கம் சிறப்பாக இருக்காது. வணிகத்தில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கடன் சிக்கல்கள் ஏற்படக்கூடும். பெற்ற பணத்தை திரும்பத் தருவதற்கு சற்று தாமதமாகும். அதனால் உங்களுக்காக அவமானங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும்.
காதல் வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினரோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகளை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு பணமும் கையில் கிடைக்கக்கூடும். இல்லை என்றால் உங்களுக்கு பணம் இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். நிதி நிலைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மீன ராசி
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் செவ்வாய் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் நிதிநிலை மோசமான சூழ்நிலை ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிதாக வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் அதனை சற்று தள்ளி வைப்பது நல்லது. இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமானதாக இருக்காது. நீதிமன்ற வழக்குகள் காலம் தாழ்த்திக் கொண்டே செல்லும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். எதிரிகள் உங்களை நோக்கி வந்து கொண்டே இருப்பார்கள். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. வணிகத்தில் உங்களுக்கு இப்போது ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும். தேவையில்லாத இடங்களில் வாய் கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்