Pongal Zodiac: மகரத்தில் காலடி.. சூரியன் பொங்கலோ பொங்கல்.. 3 ராசிகள் தலையில் கிரீடம்.. அசைக்க முடியாது..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pongal Zodiac: மகரத்தில் காலடி.. சூரியன் பொங்கலோ பொங்கல்.. 3 ராசிகள் தலையில் கிரீடம்.. அசைக்க முடியாது..!

Pongal Zodiac: மகரத்தில் காலடி.. சூரியன் பொங்கலோ பொங்கல்.. 3 ராசிகள் தலையில் கிரீடம்.. அசைக்க முடியாது..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 15, 2025 09:44 AM IST

Pongal Zodiac: சூரிய பகவான் மகர ராசிக்கு சென்ற திருநாள் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சொர்க்க யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Pongal Zodiac: மகரத்தில் காலடி.. சூரியன் பொங்கலோ பொங்கல்.. 3 ராசிகள் தலையில் கிரீடம்.. அசைக்க முடியாது..!
Pongal Zodiac: மகரத்தில் காலடி.. சூரியன் பொங்கலோ பொங்கல்.. 3 ராசிகள் தலையில் கிரீடம்.. அசைக்க முடியாது..!

நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஜனவரி 14-ம் தேதியான நேற்று சூரிய பகவான் மகர ராசியில் நுழைந்தார். இதனால் தை மாதம் பிறந்தது இந்த திருநாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவான் மகர ராசிக்கு சென்ற திருநாள் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சொர்க்க யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

கன்னி ராசி

சூரிய பகவானின் மகர ராசி பயணத்தால் தை மாதம் பிறந்திருக்கின்றது. இதனால் இது உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு பிறகு திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல வெற்றியை தேடி தரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்ப சூழலில் இனிமை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். படிப்பிற்காக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

ரிஷப ராசி

இந்த தை மாதத்தில் இருந்து சூரிய பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கக்கூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். உங்களுடைய செயலால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மனிதர்கள் நல்ல லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

இந்த தை மாதத்தில் சூரியன் போல் உங்களுக்கு வாழ்க்கை மிகவும் ஒளிமயமாக இருக்கக்கூடும். சூரியனின் மகர ராசி பயணம் உங்களுக்கு யோசத்தை பெற்று தருகின்றது. சிறப்பான செயல் திறனால் எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வணிகத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு நிதி முன்னேற்றத்தை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு அந்தஸ்து அதிகரிக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Whats_app_banner