ராமபிரான் விட்ட அம்பு.. பாறையில் இருந்து வழிந்த தீர்த்தம்.. கோயில் கொண்ட தீர்த்தகிரீஸ்வரர்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராமபிரான் விட்ட அம்பு.. பாறையில் இருந்து வழிந்த தீர்த்தம்.. கோயில் கொண்ட தீர்த்தகிரீஸ்வரர்..!

ராமபிரான் விட்ட அம்பு.. பாறையில் இருந்து வழிந்த தீர்த்தம்.. கோயில் கொண்ட தீர்த்தகிரீஸ்வரர்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 21, 2024 06:00 AM IST

Theerthakirisvarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் எனவும் தாயார் வடிவாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

ராமபிரான் விட்ட அம்பு.. பாறையில் இருந்து வழிந்த தீர்த்தம்.. கோயில் கொண்ட தீர்த்தகிரீஸ்வரர்..!
ராமபிரான் விட்ட அம்பு.. பாறையில் இருந்து வழிந்த தீர்த்தம்.. கோயில் கொண்ட தீர்த்தகிரீஸ்வரர்..!

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மன்னர்கள் மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் தங்களது கலைநயத்தை மற்றும் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

தென்னிந்தியாவை ஆண்டு வந்த அனைத்து மன்னர்களும் சிவபெருமானின் தீவிர பக்தனாக திகழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக சிவபெருமானுக்கு போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கோயில்களின் கட்டிடக்கலைகள் இன்று வரை வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் எனவும் தாயார் வடிவாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

ராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துள்ளார். அதில் ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று திருத்தங்கள் நிறைந்த இந்த தீர்த்தமலை திருக்கோயில். தீர்த்தமலையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தீர்த்தமும் புண்ணியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய அனைத்து திருத்தங்களும் மருத்துவ குணங்கள் மற்றும் கடவுளின் மகிமை கொண்ட தீர்த்தங்களாக கருதப்படுகின்றன.

ராமபிரான் தீர்த்தம்

பாறைகளில் இருந்து வெளிப்படும் இந்த தீர்த்தமானது இறைவனால் ஆசி வழங்கப்பட்ட திருத்தம் என கூறப்படுகிறது ராமபிரானை வேண்டிக்கொண்டு இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என கூறப்படுகிறது.

கௌரி தீர்த்தம்

தாயார் வடிவாம்பிகை அருள் ஆசியோடு வழங்கப்படும் தீர்த்தமாக இது கருதப்படுகிறது. வடிவாம்பிகை தாயை வழிபட்டு இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள திருமண தடை தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி அடைய கூறப்படுகிறது.

குமார தீர்த்தம்

முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்த நீராக இது கருதப்படுகிறது. முருகப்பெருமானை வழிபட்டு இந்த தீர்த்தத்தை பருகினால் நமது வாழ்க்கையில் அறிவு மற்றும் ஞானம் இரண்டும் அதிகமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

அக்னி தீர்த்தம்

பெண் ஆசையால் தோஷம் ஏற்பட்டு அக்னி தேவன் தனது சாபத்தை போக்கிக் கொண்ட தீர்த்தமாக இது கருதப்படுகிறது. இந்த திருத்தத்தில் வழிபட்டால் சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் அனைத்தும் குணமடையும் என நம்பப்படுகிறது.

அகத்தியர் தீர்த்தம்

அகத்தியருக்கு ஏற்பட்டிருந்த நோயை நிவர்த்தி செய்வதற்காக இறைவன் அருளிய தீர்த்தம் தான் இந்த அகத்தியர் தீர்த்தம். இந்த தீர்த்தத்தை அருந்திவிட்டு இறைவனை வேண்டிக் கொண்டால் வயிற்று சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என நம்பப்படுகிறது. சிலர் இந்த திருத்தத்தை உணவில் சேர்க்கும் சமைத்து சாப்பிடுகின்றனர்.

தல வரலாறு

ராமபுரம் ராவணனை கொன்றுவிட்டு அயோத்தி நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்த பொழுது சிவபெருமானுக்கு பூஜை செய்ய விரும்பியுள்ளார். அப்போது அதற்காக காசியில் இருந்து தீர்த்தம் மற்றும் பூவை எடுத்து வரும்படி அனுமனை அனுப்பியுள்ளார். அனுமன் வருவதற்கு தாமதமாகிவிட்டது.

இதனால் ராமபிரான் தனது அம்பை எடுத்து மலை மீது எய்தார். ராமபிரானின் அம்புபட்டு அந்த பாறையில் இருந்து தீர்த்தம் வெளியேறியது. அதனை வைத்து ராமபிரான் சிவபெருமானுக்கு பூஜை நடத்தினார். இதனால் இந்த தீர்த்தத்திற்கு ராம தீர்த்தம் என்று திருநாமம் வந்தது.

அதன் பின்னர் அனுமன் எடுத்து வந்த தீர்த்தத்தை தூக்கி வீசினார். அது அந்த இடத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய தென்பெண்ணையின் ஆற்றங்கரையில் விழுந்தது. அது அனுமந்த தீர்த்தம் என்ற பெயரை பெற்றது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்துவிட்டு அதன் பின்னர் ராம தீர்த்தத்தில் குளித்தால் நமது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இங்கு இருக்கக்கூடிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. மேலும் ராஜராஜ குலத்துங்க சோழனால் இந்த கோயிலுக்கு 1041 ஆம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மலை மீது இருக்கக்கூடிய சிவபெருமானின் கோயில்களில் இது மிகவும் அற்புதமான தலமாக திகழ்ந்து வருகிறது.

Whats_app_banner