தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs Where Venus And Saturn Together Will Bring Luck

கும்பத்தில் குடிகொண்ட சுக்கிரன்.. சனியோடு சேர்ந்து ஆட்டம்.. பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 21, 2024 01:35 PM IST

Venus and Saturn: கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார். தற்போது அவருடைய ராசியில் நுழைந்து சுக்கிரன் சனியோடு ஒன்று சேர்ந்தார். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் ஆவர் இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக திகழ்ந்தவர்கள் மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார்.

ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார். தற்போது அவருடைய ராசியில் நுழைந்து சுக்கிரன் சனியோடு ஒன்று சேர்ந்தார். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் ஆவர் இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அவமானப்பட நினைத்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். மற்றவர்களுக்கு தொண்டு செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு மற்றும் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உங்கள் திட்டங்கள் ரகசியமாக இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் வருமானம் அதிகரிக்கப்படும். நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு வெற்றியடையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel