தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வாழ்க்கையில் உதயத்தை கொடுக்கும் சூரியன்.. ரிஷபத்தில் பணம் மழை.. யோகத்தில் நுழையப் போகும் ராசிகள்

வாழ்க்கையில் உதயத்தை கொடுக்கும் சூரியன்.. ரிஷபத்தில் பணம் மழை.. யோகத்தில் நுழையப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 18, 2024 01:22 PM IST

zodiac signs: கடந்த மே மாதம் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். அன்றைய தினம் வைகாசி மாதம் பிறந்தது.

வாழ்க்கையில் உதயத்தை கொடுக்கும் சூரியன்.. ரிஷபத்தில் பணம் மழை.. யோகத்தில் நுழையப் போகும் ராசிகள்
வாழ்க்கையில் உதயத்தை கொடுக்கும் சூரியன்.. ரிஷபத்தில் பணம் மழை.. யோகத்தில் நுழையப் போகும் ராசிகள்

அந்த வகையில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். அன்றைய தினம் வைகாசி மாதம் பிறந்தது. சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரிஷப ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். சொந்த தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். இது மாணவர்களுக்கான காலமாக அமையும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கண் மட்டும் சிக்கல்களை ஏற்படுத்தும். மற்றபடி எந்த பிரச்சனைகளும் இல்லை.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலைக்கான தொடக்கம் நன்மையாக ஆரம்பமாகும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel