Suriyan Attack: மூச்சு முட்ட போகும் ராசிகள்.. சூரியன் தோளில் அமர்ந்தார்.. இனி உங்களுக்கு கஷ்டம் தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Suriyan Attack: மூச்சு முட்ட போகும் ராசிகள்.. சூரியன் தோளில் அமர்ந்தார்.. இனி உங்களுக்கு கஷ்டம் தான்

Suriyan Attack: மூச்சு முட்ட போகும் ராசிகள்.. சூரியன் தோளில் அமர்ந்தார்.. இனி உங்களுக்கு கஷ்டம் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
May 30, 2024 02:47 PM IST

Lord Sun: சூரிய பகவான் கடந்த மே மாதம் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றன.

மூச்சு முட்ட போகும் ராசிகள்.. சூரியன் தோளில் அமர்ந்தார்.. இனி உங்களுக்கு கஷ்டம் தான்
மூச்சு முட்ட போகும் ராசிகள்.. சூரியன் தோளில் அமர்ந்தார்.. இனி உங்களுக்கு கஷ்டம் தான்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சூரிய பகவான் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். அப்போது தமிழ் மாதம் பிறக்கின்றது.

சூரிய பகவான் கடந்த மே மாதம் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றன. சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு மாத காலம் உங்களுக்கு மந்தமான சூழ்நிலை இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். 

நிதி நிலைமையில் பலவீனமான சூழ்நிலை உண்டாகும். பணம் சேமிப்பதற்கு சற்று தாமதமாகும். நிதி நெருக்கடியில் நீங்கள் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை அமையும் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் சாதகமற்ற சூழ்நிலை இருக்கும். திட்டமிட்டு செலவுகளை செய்தால் முன்னேற்றம் உண்டாகும். பணக்கஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் எதிர்பாராத நேரத்தில் அதிகரிக்க கூடும். 

செலவுகளை கட்டுப்படுத்தினால் நீங்கள் முன்னேற்றத்தில் அடையலாம். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பண இழப்புகள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது உங்களுக்கு நல்லது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மூலம் சிக்கல்கள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்க கூடும். இந்த காலத்தில் புதிய முடிவுகளை எடுப்பது தவறான செயலாகும். திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்துவதற்கு சற்று தாமதமாகும். 

இந்த ஒரு மாத காலம் நீங்கள் பணம் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை நிதி நிலைமையில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner