தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Receive Guru Bhagavan Yoga

Guru Luck: பண யோகத்தை தரப்போகிறார் குரு.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 28, 2024 09:50 AM IST

Guru Peyarchi: குரு பகவானின் யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். ஒரு

வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். மே 6ஆம் தேதி ஒன்று அஸ்தமனம் ஆகிறார். இந்நிலையில் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுப்பார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் வருமானத்திற்கான ஆதாயங்கள் உருவாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பொருள் வசதிகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான காலமாக அமையும்.

கன்னி ராசி

 

குருபகவான் உங்களுக்கு முழு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். விருப்பங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. நினைத்த திட்டங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்க கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.