தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாதுC

மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாதுc

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 28, 2024 10:45 AM IST

புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயத்தால் தடைபட்டுக் கிடந்த சில நற்பலன்கள் சில ராசிகளுக்கு கிடைக்க உள்ளன. புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதன் ராசி
புதன் ராசி

இந்நிலையில் புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயத்தால் தடைபட்டுக் கிடந்த சில நற்பலன்கள் சில ராசிகளுக்கு கிடைக்க உள்ளன. புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் உதயமாகி பயணம் செய்து வரும் புதன் பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்டு கிடந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியத்தால் முன்னேற்றம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல யோகத்தை பெற்று தரும். நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு கிடந்த சிக்கல்கள் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. எடுத்த துறைகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel