தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ரிஷப பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது

ரிஷப பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
May 17, 2024 01:37 PM IST

Lord Mercury: மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் புதன் பகவான் நுழைகின்றார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

ரிஷப பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது
ரிஷப பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது

புதன் பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுதும் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.

வருகின்ற மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் புதன் பகவான் நுழைகின்றார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் 12வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கடக ராசி

 

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பற்றி தரும். நல்ல ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். பேச்சுத் திறமையால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel