Kubera Budhan: புதன் புரட்டி போட வந்துவிட்டார்.. உதயத்தால் கொட்டும் பணமழை.. ராஜயோக ராசிகள்-here we will find the zodiac signs that will give lord mercury udayam yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kubera Budhan: புதன் புரட்டி போட வந்துவிட்டார்.. உதயத்தால் கொட்டும் பணமழை.. ராஜயோக ராசிகள்

Kubera Budhan: புதன் புரட்டி போட வந்துவிட்டார்.. உதயத்தால் கொட்டும் பணமழை.. ராஜயோக ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2024 11:44 AM IST

Lord Mercury: உதய நிலையில் கிரகங்களின் ஆற்றல் இரட்டிப்பாக இருக்கும். புதன் பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகவும் முக்கியமான செயல் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அஸ்தமன நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மார்ச் 15 ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதே நாளில் கும்ப ராசியில் செவ்வாய் பகவான் இடம் மாறினார்.

பொதுவாக கிரகங்களின் ஆற்றலானது அஸ்தமன நிலையில் மிகவும் குறைவாக இருக்கும். உதய நிலையில் கிரகங்களின் ஆற்றல் இரட்டிப்பாக இருக்கும். புதன் பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்

ரிஷப ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பணம் யோகத்தை கொடுக்க போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய அறிவு திறமையால் லாபம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்கள் இருக்கும். புதிய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உறவினர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு வாழ்க்கையில் உயர்வை தரப் போகின்றது. கல்விக்காக வெளிநாடு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தற்போது நல்ல நேரம் உங்களுக்கு தொடங்கி விட்டது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ச்சியான தருணங்கள் உருவாக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

 

புதனின் உதய காலம் உங்களுக்கு ராஜ யோகத்தை கொடுக்கப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உறவினர்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.