Tamil News  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Get The Good Results Of Lord Suriyan

Suriyan Luck: சூரியனால் பிரகாசமாக மாறப்போகும் யோகராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 26, 2024 03:30 PM IST

சூரிய பகவானின் நல்ல பலன்களை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று தைத்திருநாளில் மகர ராசிக்கு நுழைந்தார். இவர் மகர ராசிக்குள் நுழையும் நாள் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கப் போகின்றது. நீங்கள் சூரிய பகவானை அதிபதியாக கொண்டு இருப்பதால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எடுக்கும் காரியம் அனைத்தும் வெற்றி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு முயற்சிகள் நல்ல பலனை பெற்றுத் தரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டை பார்க்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

கும்ப ராசி

 

சூரிய பகவான் சஞ்சாரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய இவர் ஆளுமை தன்மையை அதிகப்படுத்த போகின்றார். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகப் பயணம் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.