தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Get Lucky Due To The Rise Of Lord Mercury

Mercury: புதன் நாளை ஒதுக்கின்றார்.. 3 ராசிகளுக்கு பணமழை உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 06, 2024 10:49 AM IST

புதன் பகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

புதன்
புதன்

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான அம்சங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை மோசமான நிலையில் இருந்தால் மோசமான பலன்கள் கிடைக்கும். தற்போது புதன் பகவான் சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஒரு மார்ச் 7ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார் அதாவது நாளை நுழைகின்றார்.

புதன் பகவான் தற்போது அஸ்தமன பயணத்தில் இருக்கின்ற காரணத்தினால் அந்த நிலையிலேயே மீன ராசிக்குள் நுழைகின்றார். வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் புதன் பகவான் உதயம் ஆகின்றார். இவருடைய உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் புதன் பகவான் 11ஆவது வீட்டில் உதயமாகின்றார். உங்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். கடின உழைப்பு நல்ல பணங்களை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் உதயமாகின்றார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். புதிய முதலீடுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் உதயமாகின்றார். பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணத்தின் சேமிப்பு அதிகரிக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel