Pongal Rasipalan: பொங்கலில் பணவிருத்தி பெறுகின்ற ராசிகள்
பொங்கல் திருநாளில் இருந்து சிறப்பான பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
தமிழர்களின் மிகப்பெரிய பண்டிகையாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது நமது இந்தியாவில் பல இடங்களில் பல்வேறு விதமான பெயர்களில் இந்த திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மகர சங்கராந்தி, பொங்கல் என பல பெயர்களில் இந்த தை திருநாள் ஜனவரி 15ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது.
இந்த நாளில் தான் சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இந்த தினத்தில் இருந்து அனைவருக்கும் சூரிய பகவானின் தாக்கமானது இருக்கும். சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். சூரிய கடவுளை வழிபாடு செய்யக்கூடிய திருநாளாக இந்த தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
பஞ்சாங்கத்தின் படி பார்த்தால் தை மாதம் மிகவும் சிறப்புக்குரிய மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு இது முக்கிய திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகர ராசியில் சூரிய பகவான் இடம் மாறும் பொழுது இந்த மகர சங்கராந்தி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இந்த பொங்கல் பண்டிகை திகழ்ந்து வருகிறது.
இந்த தைத்திருநாள் ஆன பொங்கல் திருநாளில் சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்க போகின்றது அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
சூரிய பகவான் மகர ராசிக்குள் வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. கடின உழைப்பின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும் புதிய தொழில் நல்ல ஏற்றத்தை கொடுக்கும்.
மிதுன ராசி
சூரியனின் புதிய இடமாற்றம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். சுற்று வட்டாரத்தில் உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். அனைத்து செயல்களுக்கும் புதிய தொடக்கமாக இந்த திருநாள் உங்களுக்கு அமையும்.
கடக ராசி
இந்த பொங்கல் திருநாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையப் போகின்றது. இன்று முதல் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பலன்கள் தொடங்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.
தனுசு ராசி
சூரிய பகவான் உங்களுக்கு செல்வத்தை அதிகரித்துக் கொடுக்க போகின்றார். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு செல்வம் அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் வருவாய் அதிகரித்து நிதி பெருக்கம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சூரிய பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9