2024 Good Luck: புத்தாண்டில் சுப யோகம் பெறும் ராசிகள் இவர்கள்தான்
இந்த ஆண்டு நல்ல யோகத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.
புத்தாண்டு தொடங்கிவிட்டது இந்த ஆண்டு எப்படி இருக்கும் என பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். பல கிரகங்களின் இடமாற்றம் இந்த ஆண்டு நிகழ உள்ளது. இந்த இடமாற்றம் பல ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளையும் உருவாக்கும்.
குருபகவான், சனி பகவான், ராகு கேது, செவ்வாய் என பல கிரகங்கள் தங்களது சீரான நிலையால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளனர். கிரகங்களின் இடமாற்றமே 12 ராசிகளுக்கும் செயல்பாடுகளை தீர்மானிக்கின்றது.
ஒவ்வொரு நாளும் எப்படி தொடங்கும் என்று எதிர்பார்ப்போடு அனைவரும் தங்களது பயணத்தை தொடங்குகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சில ராசிகள் சில மகிழ்ச்சியான சூழ்நிலையை பெறப்போகின்றனர். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ராசிகளை இங்கே காண்போம்
ரிஷப ராசி
எந்த குறையும் இருக்காது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். ஆடம்பரமான பொருட்கள் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கடன் சிக்கல்கள் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுன ராசி
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுப காரியங்கள் நடக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கடக ராசி
தேவையில்லாத செலவுகள் குறையும் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் விரைவில் அது குறையும். பூர்விக சொத்துக்களால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
கன்னி ராசி
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும் இருக்கும். துணிவாக செயல்பட்டு அனைத்து காரியங்களும் முடிவடையும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9