தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Get Good Results From Transit Of Venus

Sukran: மாறப்போகும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2024 11:59 AM IST

Transit of Venus: சுக்கிர பெயர்ச்சி மூலம் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்களது ராசியை இடமாற்றுவார்கள் அந்த வகையில் சுக்கிரன் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் பிப்ரவரி மாதம் மகர ராசிக்கு இடம் மாறுகிறார். மார்ச் மாதம் மீன ராசியில் நுழைகிறார்.

மீன ராசி சுக்கிர பகவானின் உச்ச ராசியாக விளங்கி வருகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று இந்த ராசிக்குள் நுழைகிறார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் முக்கியமான மாற்றத்தை பெறப்போகின்றனர். அவர்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதன் காரணமாக உங்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அமரப் போகின்றார் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மற்றவர்களிடத்திலும் மரியாதை அதிகரிக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். பெரிய தலைவர்களோடு உறவு ஏற்படும். சில பதவிகள் கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கன்னி ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாம் இடத்தில் அமர போகின்றார். மீனத்தில் சுக்கிரன் இருப்பதால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. திடீரென எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் உங்களுக்கு ஏற்றுவாறு அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.