தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி 139 நாட்கள் விடமாட்டார்.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. கொண்டாட்டத்தில் குதிக்கப் போகும் ராசிகள்

சனி 139 நாட்கள் விடமாட்டார்.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. கொண்டாட்டத்தில் குதிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 03, 2024 05:46 PM IST

Sani vakra peyarchi: 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிரநிலையை அடைந்து பயணம் செய்ய உள்ளார். 139 நாட்கள் இதே நிலைமையில் இருப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுபமான பலன்களை பெற போகின்றன.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

நன்மைகள் மற்றும் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் கடந்த ஆண்டு தனது சொந்த ராசியான கும்பராசியில் நுழைந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும்.

2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிரநிலையை அடைந்து பயணம் செய்ய உள்ளார். 139 நாட்கள் இதே நிலைமையில் இருப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுபமான பலன்களை பெற போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

உங்கள் ராசிகள் சனி பகவான் வக்ர பெயர்ச்சி மிகப்பெரிய பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். 

சக ஊழியர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வருமானம் அதிகரிக்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. எதிர் வராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

துலாம் ராசி

 

சனி வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு செல்வத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. சனிபகவான் உங்களுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொடுக்கப் போகின்றார். நீண்ட நாட்களாக நெல்வேல் இருந்த வேலைகள் முடிவடையும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். 

பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மீன ராசி

 

வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை இந்த சனி வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. கைவிட்டு போன செல்வங்கள் எல்லாம் உங்களை வந்து சேரும் வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் மகத்தான வெற்றி உங்களுக்கு கிடைக்கும். 

புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். நிதிநிலை நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel