தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பரணியில் பண மூட்டையை வீசப் போகும் சூரியன்.. அதிர்ஷ்டத்தில் அந்தரத்தில் பறக்க போகும் ராசிகள்.. சூரிய பிரகாசம்!

பரணியில் பண மூட்டையை வீசப் போகும் சூரியன்.. அதிர்ஷ்டத்தில் அந்தரத்தில் பறக்க போகும் ராசிகள்.. சூரிய பிரகாசம்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 03, 2024 02:59 PM IST

Money Rain: கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு சென்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் மே11ம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர்.

சூரியன்
சூரியன்

சூரிய பகவான் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்வார். நவகிரகங்களின் தலைவனாக விளங்கிவரும் சூரிய பகவான் ஏப்ரல் 13-ம் தேதி அன்று மேஷ ராசியின் நுழைந்தார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு சென்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் மே11ம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மிதுன ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் மனக்கவலைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்துவரும். சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். பணம் சேமிப்புக்கான சூழ்நிலைகள் அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உறவினர்களிடம் ஏற்பட்டு வந்த மனக்கசப்புகள் குறையும். பெற்றோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel