தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தை மூட்டையாக கொட்டப்போகும் கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் சேர்க்கை.. ஜாக்பாட் ராசி யார்?

பணத்தை மூட்டையாக கொட்டப்போகும் கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் சேர்க்கை.. ஜாக்பாட் ராசி யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 19, 2024 01:38 PM IST

Gajalakshmi Yoga: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவான கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கஜலட்சுமி யோகம்
கஜலட்சுமி யோகம்

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதன் காரணமாக குரு பகவானோடு சுக்கிரன் இணைகிறார். குரு சுக்கிரன் சேர்க்கை மிகவும் மங்களகரமான யோகத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உருவாக்கியுள்ள கஜலட்சுமி ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். இந்த ராஜயோகம் மே ஒன்றாம் தேதி வரை நீடிக்கும். அதற்குப் பிறகு குரு பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார்.

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவான கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். உன் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகம் உண்டாகும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் கஜலட்சுமி யோகம் நான்காவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் நீங்கள் புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். லட்சுமி தேவியின் முழு ஆசி உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய அதிக ஈடுபாட்டால் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு அதிக தன்னம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். ஒவ்வொரு செயலிலும் உங்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்பத்தினரோடு நேரம் செலவிடக்கூடிய சூழ்நிலை அமையும். வேலை செய்யும் இடத்தில் அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் நிதி ஆதாயம் உண்டாகும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel