தலை விதியை மாற்றப் போகும் புதன்.. உதயத்தில் தொடங்கி விட்டார்.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது.. பணமழை நிச்சயம்-here we will find the zodiac signs that will get changes in life due to the rise of lord mercury - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தலை விதியை மாற்றப் போகும் புதன்.. உதயத்தில் தொடங்கி விட்டார்.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது.. பணமழை நிச்சயம்

தலை விதியை மாற்றப் போகும் புதன்.. உதயத்தில் தொடங்கி விட்டார்.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது.. பணமழை நிச்சயம்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 23, 2024 10:47 AM IST

Lord Mercury: புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இளவரசன் அவர்கள் விளங்கும். புதன் பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இளவரசன் அவர்கள் விளங்கும். புதன் பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார்.

அனைத்து கிரகங்களின் செயல்பாடுகளும் அஸ்தமன நேரத்தில் மிகவும் குறைவாக இருக்கும். உதயமாகிவிட்டால் அவர்களின் பலம் இரட்டிப்பாக மாறிவிடும். அந்த வகையில் புதன் உதயமாகியுள்ள காரணத்தினால் அதனின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து நிவர்த்தி கிடைக்கப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட நாள் நடக்காமல் இருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் உதயத்தின் தாக்கம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

 

புதனின் உதயம் உங்களுக்கு உயர்வை தரப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

துலாம் ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு யோகத்தை தர போகின்றது. புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9