தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு புயலாய் மாறி சூறாவளியாய் பணமழை கொட்ட போகிறார்.. அதிர்ஷ்ட காற்று வீசப்போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

குரு புயலாய் மாறி சூறாவளியாய் பணமழை கொட்ட போகிறார்.. அதிர்ஷ்ட காற்று வீசப்போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 28, 2024 03:31 PM IST

Guru Bhagavan: குருபகவான் ரிஷப ராசியில் புகுந்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இந்த நிகழ்வும் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குருபகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

குரு
குரு

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசிக்கான ரிஷப ராசியில் நுழைகின்றார். இந்த ஆண்டு மிகப்பெரிய நிகழ்வாக குரு பகவானின் இடமாற்றம் பார்க்கப்படுகிறது.

குருபகவான் ரிஷப ராசியில் புகுந்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இந்த நிகழ்வும் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குருபகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் இணக்கமான சூழ்நிலை அமையும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவானின் அஸ்தமனம் பல்வேறு விதமான யோகங்களை தரப்போகின்றது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்களிடம் இணக்கமான சூழ்நிலை அமையும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

துலாம் ராசி

 

குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான சுப மாற்றங்கள் உண்டாகப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பண வரவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நண்பர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel