தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Get A Good Life From Lord Saturn

Shani Yoga: சனி யோகம் தருகிறார்.. இந்த ராசிகளுக்கு உச்சம் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2024 09:54 AM IST

lord Saturn: சனி பகவானால் நல்ல வாழ்க்கையை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள்.

அந்த வகையில் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். ஒரு ராசியில் இருந்து ஒரு ராசிக்கு இடம் மாறுவதற்கு சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.

இது அவருடைய சொந்த ராசியாகும் வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருக்கப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி 

 

சனிபகவானின் அருளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குருபகவான் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். சனி பகவானால் உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படும் கவலை வேண்டாம்.

ரிஷப ராசி

 

பல்வேறு விதமான வாய்ப்புகளை உங்களுக்கு சனி பகவான் செய்து கொடுப்பார். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சேமிப்பதில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவியல் இந்த குறையும் இருக்காது.

மிதுன ராசி

 

நீண்ட நாளுக்கு பிறகு சனி பகவான் உங்களுக்கு அதிக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவுகள் அதிகரித்தாலும் சுப செலவுகளாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சனியின் சஞ்சாரத்தால் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு சுப ஆண்டாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.