தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: ரிஷபத்தில் புறப்பட்டார் புதன்.. பொங்கும் பண கடலில் மூழ்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் பறந்து வருகுது

Lord Mercury: ரிஷபத்தில் புறப்பட்டார் புதன்.. பொங்கும் பண கடலில் மூழ்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் பறந்து வருகுது

Suriyakumar Jayabalan HT Tamil
May 24, 2024 10:36 AM IST

Lord Mercury: சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது.

ரிஷபத்தில் புறப்பட்டார் புதன்.. பொங்கும் பண கடலில் மூழ்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் பறந்து வருகுது
ரிஷபத்தில் புறப்பட்டார் புதன்.. பொங்கும் பண கடலில் மூழ்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் பறந்து வருகுது

புதன் பகவான் ஒரு ராசியில் நல்ல பயணத்தில் இருந்தால் அவர்களுக்கு படிப்பு மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது புதன் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் செல்கிறார்.

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அந்த வகையில் ரிஷபத்தில் பயணம் செய்யும் முதல் பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு இங்கு எதிர் பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடிவரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும்.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய பொருட்கள் உங்களை தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேதி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை பணியின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அற்புதமான பலன்கள் உங்களை தேடி வரும். முக்கியமான நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel