தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Attack Rasis: அடி விழப்போகும் ராசிகள்.. புதன் அஸ்தமனத்தில் நெருப்பு.. சிக்கி சிதையும் ராசிகள் நீங்களா பாருங்கள்?

Attack Rasis: அடி விழப்போகும் ராசிகள்.. புதன் அஸ்தமனத்தில் நெருப்பு.. சிக்கி சிதையும் ராசிகள் நீங்களா பாருங்கள்?

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2024 04:49 PM IST

Attack Rasis: ரிஷப ராசியில் அஸ்தமனமாகும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

அடி விழப்போகும் ராசிகள்.. புதன் அஸ்தமனத்தில் நெருப்பு.. சிக்கி சிதையும் ராசிகள் நீங்களா பாருங்கள்?
அடி விழப்போகும் ராசிகள்.. புதன் அஸ்தமனத்தில் நெருப்பு.. சிக்கி சிதையும் ராசிகள் நீங்களா பாருங்கள்?

புதன் பகவான் வருகின்ற மே 31ஆம் தேதி அன்று அதாவது நாளை சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசியில் நுழைகிறார். அடுத்த ஓரிரு நாட்களில் ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். அஸ்தமன நிலையில் கிரகங்கள் தங்களது கெடுப்பலன்களை கொடுப்பார்கள்.

கிரகங்கள் அஸ்தமன நிலையில் தங்களது பலத்தை இழந்து காணப்படுவார்கள். இதன் காரணமாக ரிஷப ராசியில் அஸ்தமனமாகும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்க சட்ட தாமதமாகும். வேலைகளில் பல்வேறு விதமான தடைகள் கிடைக்கக்கூடும். மற்றவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சண்டைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

வாழ்க்கை துணையோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் தேடி வரும்.

மீன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆக உள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். வேலையை நீங்கள் மாற்ற நினைத்தால் அந்த சிந்தனையை தற்போது தவிர்ப்பது நல்லது. 

வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. தொழிலில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏழரை சனி உங்களுக்கு நடந்து கொண்டிருப்பதால் 2025 வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டிச் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். 

எதிரிகளால் உங்களுக்கு அதிகம் சிக்கல்கள் ஏற்படக்கூடும். கடன் சுமை அதிகரிக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் வாக்குவாதம் ஏற்படக்கூடும். மன அழுத்தம் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel