தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru 2024: குரு அஸ்தமனத்தில் அடிதடி.. சிதைவது உறுதியான ராசிகள்.. தப்பிச்சு ஓட வழியே இல்ல

Lord Guru 2024: குரு அஸ்தமனத்தில் அடிதடி.. சிதைவது உறுதியான ராசிகள்.. தப்பிச்சு ஓட வழியே இல்ல

Suriyakumar Jayabalan HT Tamil
May 25, 2024 06:13 PM IST

Lord Guru 2024: தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசிகள் நுழைந்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார்.

குரு அஸ்தமனத்தில் அடிதடி.. சிதைவது உறுதியான ராசிகள்.. தப்பிச்சு ஓட வழியே இல்ல
குரு அஸ்தமனத்தில் அடிதடி.. சிதைவது உறுதியான ராசிகள்.. தப்பிச்சு ஓட வழியே இல்ல

தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசிகள் நுழைந்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார்.

இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அஸ்தமனத்தால் சங்கடங்களை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

குருபகவான் உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் சம்பந்தமான பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடன் வேலை செய்பவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தராது. 

நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கும் செலவுகள் அதிகரிக்கப்படும். கடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மீன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்த வேலைகள் விரைவில் முடிவதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். எந்த முடிவு எடுத்தாலும் ஒன்றுக்கு மூன்று முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

தனுசு ராசி

குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தராது. 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்களுக்கு இடையே சங்கடங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். இதனால் உங்களுக்கு உயர் மன அழுத்தம் ஏற்படுவதால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel