தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury Horoscope: புரட்டிப் போடும் புதன்.. பணத்தில் விழுவது உறுதி.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா பாருங்கள்

Mercury Horoscope: புரட்டிப் போடும் புதன்.. பணத்தில் விழுவது உறுதி.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா பாருங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 01, 2024 11:58 AM IST

Lord Mercury: புதன் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தில் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

புரட்டிப் போடும் புதன்.. பணத்தில் விழுவது உறுதி.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா பாருங்கள்
புரட்டிப் போடும் புதன்.. பணத்தில் விழுவது உறுதி.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா பாருங்கள்

புதன் பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனத்தில் உச்சத்தில் அருளைக் கொடுப்பார். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷ ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான், மே 31ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.

புதன் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தில் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும்.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அனைத்து இன்பங்களும் தேடிவரும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்தி தேடி வரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel