தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ரிஷபத்தில் சூரிய பெயர்ச்சி.. ஒரு மாதம் பணமழை.. அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா?

ரிஷபத்தில் சூரிய பெயர்ச்சி.. ஒரு மாதம் பணமழை.. அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 17, 2024 05:16 PM IST

Lord Surya: மே 14-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சூரிய பகவான் சென்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அடுத்த 30 நாட்களுக்கு ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

ரிஷபத்தில் சூரிய பெயர்ச்சி.. ஒரு மாதம் பணமழை.. அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா?
ரிஷபத்தில் சூரிய பெயர்ச்சி.. ஒரு மாதம் பணமழை.. அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா?

சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவது போல 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றுவார். கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரியன் நுழைந்தார். ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.

அந்த வகையில் மே 14-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சூரிய பகவான் சென்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அடுத்த 30 நாட்களுக்கு ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார், இதனால் உங்களுக்கு எதிரில் இறுதியாக முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பொழுதுபோக்குகளால் உங்களுக்கு பணம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். ஒரு மாத காலம் சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் முன்னேற்றம் பெறுவார்கள். சொந்த தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் 11வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த செயல் தொடங்கினாலும் அது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel