செவ்வாயும் புதனும் சேர்ந்து விட்டனர்.. ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  செவ்வாயும் புதனும் சேர்ந்து விட்டனர்.. ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்

செவ்வாயும் புதனும் சேர்ந்து விட்டனர்.. ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 28, 2024 04:49 PM IST

Mars and Mercury: செவ்வாயும் புதனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

நவக்கிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார் இவர் கொடிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் அறிவு, சுய அறிவு, புத்திசாலித்தனம், காதல், நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. புதன் பகவான் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் சேர்ந்து மகர ராசியில் பயணம் செய்கின்றார். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை உங்கள் ராசியில் முதல் வீட்டில் நிகழ்ந்துள்ளது. உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். தொழில் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் செவ்வாயும் புதனும் சேர்ந்துள்ளனர். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பல வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும். நிலுவையில் இருந்த பணங்கள் உங்களை தேடி வரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் இருந்த வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடிவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner