தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Bring Good Luck With The Aspect Of Lord Mars

Lord Mars: செவ்வாயின் விளையாட்டு தொடக்கம்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 03, 2024 10:42 AM IST

செவ்வாய் பகவான் பார்வையால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவான் என் ராசி ஆன மகர ராசியில் நுழைந்தார்.

செவ்வாய் பகவானின் மகர ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் ஒரு சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் செவ்வாய் பகவானின் நான்காவது பார்வையால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்களின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற அவருடைய நான்காவது பார்வை உங்களுக்கு கௌரவத்தை அதிகப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும் சிறந்த காலமாக இது அமையும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவானின் பார்வையானது உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முக்கியத்துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு அமையும்.

சிம்ம ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்க கூடும். வணிகர்களுக்கு லாபம் இரு மடங்காக கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கப்படும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel