தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கோடியாய் கொட்டுவார்.. அதிர்ஷ்ட பணமழை பெறுகின்ற ராசிகள்.. ராஜ வாழ்க்கை தொடக்கம்

குரு கோடியாய் கொட்டுவார்.. அதிர்ஷ்ட பணமழை பெறுகின்ற ராசிகள்.. ராஜ வாழ்க்கை தொடக்கம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 10, 2024 05:26 PM IST

குருபகவான் இடமாற்றம் சில ராசிகளுக்கு நன்மைகளும் சில ராசிகளுக்கு தீமைகளும் உண்டாக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.

குருபகவான் இடமாற்றம் சில ராசிகளுக்கு நன்மைகளும் சில ராசிகளுக்கு தீமைகளும் உண்டாக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டின் குரு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். மே மாதம் முதல் உங்களுக்கு குரு பகவானின் முழு அருள் கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் ஒரு மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். மே மாதம் முதல் உங்களுக்கு குரு பகவானின் முழு அருள் கிடைக்கும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டிற்கு செல்கின்றார். இதனால் எங்களுக்கு நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுடைய தேவைகள் நிறைவாகும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரம் கிடைக்கும். நவபஞ்ச யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel