தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: தலைகீழாக வீசி எறிய போகும் ராகு.. சிக்கி சிதையப்போகும் ராசிகள்.. உஷாராக இருங்க மக்களே

Lord Rahu: தலைகீழாக வீசி எறிய போகும் ராகு.. சிக்கி சிதையப்போகும் ராசிகள்.. உஷாராக இருங்க மக்களே

Suriyakumar Jayabalan HT Tamil
May 25, 2024 02:49 PM IST

Lord Rahu: இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவானின் பயணத்தால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

தலைகீழாக வீசி எறிய போகும் ராகு.. சிக்கி சிதையப்போகும் ராசிகள்.. உஷாராக இருங்க மக்களே
தலைகீழாக வீசி எறிய போகும் ராகு.. சிக்கி சிதையப்போகும் ராசிகள்.. உஷாராக இருங்க மக்களே

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவானின் பயணத்தால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல் இருக்கப் போகின்றது. நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு சற்று தாமதமாகும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். காதல் வாழ்க்கையில் அந்த அளவிற்கு மகிழ்ச்சி இருக்காது. திருமண வாழ்க்கையில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் நான்காவது பெட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மன உளைச்சல் அதிகம் ஏற்படும். டிசம்பர் மாதம் வரை உங்களது வாயை கட்டுப்படுத்த வேண்டும். வார்த்தைகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்ற பிரச்சனையை நீங்கள் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்திருக்கின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தராது. வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளுக்கு இது சரியான காலமாக இருக்காது. அனுபவசாலிகள் ஆலோசனை பெற்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கையில் மன கசப்புகள் ஏற்படும். காதல் வாழ்க்கை மந்தமாக இருக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு கஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel