தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Drenched In Money Rain Due To The Combination Of Three Grahas

கும்பத்தில் குவிந்தனர்.. சூரியன் சனி சுக்கிரன் சேர்க்கை.. அதிர்ஷ்டமழை.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 14, 2024 03:15 PM IST

Lord Sun: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அந்த வகையில் சூரிய பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைகின்றார். தற்போது கும்ப ராசியில் சனிபகவான் சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்று சேர்கின்றனர்.

சூரியன், சனி, சுக்கிரன்
சூரியன், சனி, சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கும் கர்மநாயகனாக சனி பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வரும் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அந்த வகையில் சூரிய பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைகின்றார். அதேசமயம் சுக்கிர பகவானும் கும்ப ராசியில் நுழைகின்றார்.

தற்போது கும்ப ராசியில் சனிபகவான் சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்று சேர்கின்றனர். இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் த்ரீகிரக யோகம் யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியை சனி, சூரியன், சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்த காரணத்தினால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் சனி சுக்கிரன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பண வரவில்லை எந்த குறையும் இருக்காது.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி, சூரியன், சுக்கிரன் சேர்க்கை நிகழ்வென்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel