தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Drenched In Money Rain Due To Saturn Star Transit

சனி குருவில் புகுந்து விட்டார்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 31, 2024 11:35 AM IST

சனி பகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குருபகவானின் நட்சத்திரமாகும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

சனி பகவான்
சனி பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். சனிபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் நன்மைகள் தீமைகளை தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரை கட்டினால் அனைவரும் அச்சப்படுவார்கள். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகின்றார்.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குருபகவானின் நட்சத்திரமாகும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷப ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் வேலை முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக் கூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.

மிதுன ராசி

 

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு மங்களத்தை கொடுக்கப் போகின்றது. ஏப்ரல் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்க போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்பை விட தற்போது முன்னேற்றம் இருக்கும். சனிபகவானின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel