Malavya Yoga: வந்துவிட்டது மாளவ்யா யோகம்.. கொட்டப் போகுது பணம்.. சுக்கிரன் நின்று விட்டார்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Malavya Yoga: வந்துவிட்டது மாளவ்யா யோகம்.. கொட்டப் போகுது பணம்.. சுக்கிரன் நின்று விட்டார்..!

Malavya Yoga: வந்துவிட்டது மாளவ்யா யோகம்.. கொட்டப் போகுது பணம்.. சுக்கிரன் நின்று விட்டார்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 01, 2024 12:57 PM IST

Malavya Yoga: சுக்கிரன் மாளவ்யா யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வந்துவிட்டது மாளவ்யா யோகம்.. கொட்டப் போகுது பணம்.. சுக்கிரன் நின்று விட்டார்
வந்துவிட்டது மாளவ்யா யோகம்.. கொட்டப் போகுது பணம்.. சுக்கிரன் நின்று விட்டார்

ஒரு ஆண்டிற்கு பிறகு சுக்கிர பகவான் தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்த வருகின்றார். இதனால் மாளவ்யா யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

இது மங்களகரமான யோகம் என்கின்ற காரணத்தினால் இந்த யோகம் ஒருவருடைய ராசியில் செயல்பட்டால் அவர்களுக்கு நிதி நிலைமை மற்றும் அதிர்ஷ்டத்தின் யோகம் முன்னேற்றமாக இருக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த மாளவ்யா யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் சுக்கிர பகவான் மாளவ்யா ராஜயோகம் பத்தாவது வீட்டில் இதனால் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்

கடக ராசி

உங்கள் ராசியில் மாளவ்யா ராஜயோகம் வந்துள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. வருமான வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்காலத்திற்கான பலன்கள் தற்போது உங்களுக்கு நடக்கக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தின் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ரிஷப ராசி 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் மாளவ்யா யோகம் சுக்கிரனால் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வருமானத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

செலவுகள் மற்றும் வருமானம் அதிகரிக்கக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையோடு உங்களுக்கு அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner