தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Blessed By Lord Mars

பொற்காசுகளை கொட்டும் செவ்வாய்.. பண முட்டையோடு வருகிறார்.. தலைகீழ் மாற்றத்தை பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 23, 2024 03:48 PM IST

Lord Mars: சனி பகவானோடு செவ்வாய் பகவான் கூட்டணி சேர போகின்றார். மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். கும்ப ராசியில் ஏற்கனவே சனிபகவான் பயணம் செய்து வருகின்றார் அது சனி பகவானின் சொந்த ராசியாகும்.

தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் கூட்டணி சேர போகின்றார். மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இடத்தை திட்டங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மூதாதையர்களால் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் உங்களுக்கு நல்ல பழக்கம் ஏற்படும். பொறுமையாக இருந்தால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்கின்ற காரணத்தினால் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோரின் உறவு உங்களுக்கு பலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி நிலவும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு ராஜ யோகத்தை தரும் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் சேமிப்பதில் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். சேமிப்பு அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வராமல் இருந்த கடன் தொகைகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel