தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Blessed By Lord Mars

Sevvai Luck: செவ்வாய் பகவானால் யோகத்தை பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 21, 2024 04:04 PM IST

செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து விதமான ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார்.

செவ்வாய் பகவான் மகர ராசியில் நுழைந்த காரணத்தினால் அனைத்து வித ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட நான்கு ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

செவ்வாய் பகவானின் பார்வை உங்கள் ராசியில் விழுகின்றது. அதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை தரும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். வெற்றிகரமான முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். வழக்கத்தை விட அதிகமான தைரியம் அதிகரிக்கும். வணிகத்தில் லாபம் இரு மடங்காக கிடைக்கும் சேமிப்பு அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். பண வரவில் எந்த குறையும். இருக்காது புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்

மேஷ ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக கொடுக்கப் போகின்றார். ஆரோக்கியம் உடலில் சீராக இருக்கும் மன தைரியம் அதிகரிக்கக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய சொத்துக்கள் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். முன்னேற்றத்திற்கான கதவுகள் அனைத்தும் திறக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்