தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Blessed By Guru And Venus

குருவும் சுக்கிரனும் சேர்ந்து கொடுக்கும் திருமண யோகம்.. ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்.. பணமழை கொட்டும்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 27, 2024 02:33 PM IST

Guru Transit: 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் பயணம் செய்து வரும் மேஷ ராசியில் சுக்கிரன் இணைகின்றார். இந்த நிகழ்வு வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. சுக்கிரன் மற்றும் குரு இவர்கள் இருவரும் இணைவதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர்.

குரு பகவான், சுக்கிர பகவான்
குரு பகவான், சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் பயணம் செய்து வரும் மேஷ ராசியில் சுக்கிரன் இணைகின்றார். இந்த நிகழ்வு வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. சுக்கிரன் மற்றும் குரு இவர்கள் இருவரும் இணைவதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த கூடும். நிதி நிலைமையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும்.

ரிஷப ராசி

 

குரு சுக்கிரன் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும். சேமிப்பு அதிகமாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும் சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் இருவரும் சேர்ந்து உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப்போகின்றனர். வாழ்க்கையில் வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள் அதிகரிக்கப் போகின்றது கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சமூகமான நெருக்கம் ஏற்படும். வருமானத்தில் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும். நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தின் மீதான நம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் யோகத்தை தர போகின்றனர். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். ஆடம்பரத்தின் வழிகள் அனைத்தும் திறக்கப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்