தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Receive Money Rain From Planets Including Saturn Venus And Sun

30 வருடங்களுக்கு பிறகு.. சனி சுக்கிரன் சூரியன் சேர்க்கை.. அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது.. பணமழை ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 30, 2024 09:59 AM IST

Saturn Venus and Sun: சூரியன் சனி சுக்கிரன் இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கின்றது. இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சூரியன் சனி சுக்கிரன்
சூரியன் சனி சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விலகி வருகின்றார். ஒவ்வொரு முறையும் சூரிய பகவான் இடமாற்றம் செய்யும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனிபகவான் பயணம் செய்து வரும் கும்ப ராசியில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் நுழைந்தார். மார்ச் மாத தொடக்கத்தில் ஏற்கனவே சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்து விட்டார். தற்போது சூரியன் சனி சுக்கிரன் இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கின்றது. இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி 

 

சூரியன் சனி மற்றும் சுக்கிரன் இந்த மூன்று கிரகங்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி சுக்கிரன் சூரியன் மூவரும் சேர்ந்துள்ளனர். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி சுக்கிரன் சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel