தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Rahu Mercury Will Give You Money Rain

Rahu Mercury: சேர்ந்து கொண்ட ராகு புதன்.. பணத்தில் குளிக்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 02, 2024 01:28 PM IST

ராகு புதன் சேர்ந்து பண மழையை கொடுக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ராகு புதன்
ராகு புதன்

ட்ரெண்டிங் செய்திகள்

அசுப கிரகங்களில் ஒருவராக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். தற்போது இவர் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானோடு புதன் பகவான் சிறப்பு இந்த சம்பவம் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ளது. மார்ச் மாதத்தில் மீன ராசியில் புதன் பகவான் நுழைவு உள்ள காரணத்தினால் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெரும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ராகு மற்றும் புதன் சேர்க்கை பத்தாவது வீட்டில் நிகழ உள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.

கும்ப ராசி

 

ராகு மற்றும் புதன் சேர்க்கை உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ உள்ளது. உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் முடிவாகும். நிதி ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும். பேச்சு திறமையால் காரிய தடைகள் விலகும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

கடக ராசி

 

புதன் மற்றும் ராகு சேர்க்கை உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நடக்க உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்டபடி வேலைகள் வெற்றியாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.