தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கட்டுக்கட்டாக கொட்டப் போகும் பணம்.. ரிஷபத்தில் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. அதிஷ்டம் வருது

கட்டுக்கட்டாக கொட்டப் போகும் பணம்.. ரிஷபத்தில் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. அதிஷ்டம் வருது

Suriyakumar Jayabalan HT Tamil
May 30, 2024 10:58 AM IST

Lord Mercury: சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். புதன் பகவான் சுக்கிர பகவானின் ரிஷப ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில் வளர்ச்சியை பெறப்போகின்றனர்.

கட்டுக்கட்டாக கொட்டப் போகும் பணம்.. ரிஷபத்தில் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. அதிஷ்டம் வருது
கட்டுக்கட்டாக கொட்டப் போகும் பணம்.. ரிஷபத்தில் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. அதிஷ்டம் வருது

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக தொகுத்து வருகின்றார். புதன் பகவான் ஒருவருடைய ராசிகள் நல்ல இடத்தில் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனத்தில் அதிகம் முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மேஷ ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார்.

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். புதன் பகவான் சுக்கிர பகவானின் ரிஷப ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில் வளர்ச்சியை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேளையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சுத் திறமையால் பல காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் தேடி வரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மகர ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகள் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel